நமது மூட்டு பகுதியில் தேய்மானம் ஆனால் கடுமையான வலி ஏற்படும்.இந்த மூட்டு தேய்மானம் கடந்த காலங்களில் முதுமையை அடைபவர்களுக்கு பெரும்பாலும் இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் இந்த மூட்டு தேய்மானப் பிரச்சனை ஏற்படுவது அதிகரித்துவிட்டது.
முழங்காலின் வலிமையை இந்த மூட்டு தேய்மானம் குறைத்துவிடும்.கடுமையான வேலையால் முழங்கால் பகுதி அதிகப்படியான தேய்மானத்தை சந்திக்கிறது.இந்த மூட்டு தேய்மான பிரச்சனையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.
மூட்டு தேய்மான அறிகுறிகள்:-
1)மூட்டு பகுதியில் வலி
2)மூட்டு தேய்மானம்
3)மூட்டு வீக்கம்
4)சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலை
மூட்டு தேய்மானமாக காரணங்கள்:
சிலருக்கு கடின வேலையால் மூட்டு தேய்மானம் ஏற்படும்.சிலருக்கு உணவுமுறை பழக்கத்தால் மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூட்டு தேய்மானத்தை ஏற்படுத்தும் உணவுப் பழக்கங்கள்:
1.முதலில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருளான வெள்ளை சர்க்கரை மூட்டு தேய்மானத்தை ஏற்படுத்தும்.கருப்பு கழிவுகளை சுத்திகரிப்பதன் மூலம் கிடைக்கும் வெள்ளை சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் பொருள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டீ,காபி போன்ற சூடான பானங்கள்,பழங்களை கொண்டு தயாரிக்கும் பானங்களில் நாம் சர்க்கரை சேர்த்து பருகும் பழக்கத்தை கொண்டிருக்கின்றோம்.வெள்ளை சர்க்கரையை அதிகமாக உட்கொண்டால் அவை எலும்பு ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கச் செய்துவிடும்.
2.மைதா உணவுகள் கெடுதல் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை மைதா உணவுகளால் ஏற்படுகிறது.மைதா மாவு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு தேய்மானம் ஏற்படும்.
3.நாம் தினமும் உண்ணும் அரிசி உணவுகளாலும் மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது.அளவிற்கு அதிகமாக அரிசி சாதத்தை உட்கொண்டால் அவை மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கும்.