உலகின் மிக வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோஸ் கோம்ஸ்… தனது 127 வயதில் மரணமடைந்துள்ளார்!!

0
122

 

உலகின் மிக வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோஸ் கோம்ஸ்… தனது 127 வயதில் மரணமடைந்துள்ளார்… சோகத்தில் குடும்பத்தினர்…

 

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான ஜோஸ் கோம்ஸ் என்பவர் தனது 127 வயதில் மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

உலகின் மிக வயதான மனிதராக வசித்து வந்த ஜோஸ் கோம்ஸ் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். 127 வயதான ஜோஸ் கோம்ஸ் அவர்கள் 1917ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி பிறந்தார். 1917ம் ஆண்டில் பிறந்த ஜோஸ் கோம்ஸ் அவர்கள் உலகப் போர்கள் மற்றும் மூன்றுவிதமான தொற்று நோய்களில் இருந்து தப்பித்து வந்துள்ளார். 127 வயதான ஜோஸ் கோம்ஸ் அவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். மேலும் 25 பேரக் குழந்தைகளும், 42 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் 11 எள்ளு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

 

இன்னும் சில நாட்கள் கடந்தால் 128 வயதை எட்டிவிடும் என்ற நிலையில் இருந்த ஜோஸ் கோம்ஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாக 127 வயதில் உயிரிழந்துள்ளார். ஜோஸ் கோம்ஸ் அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததை அடுத்து உறவினர்கள் ஜோஸ் கோம்ஸ் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

 

127 வயதான ஜோஸ் கோம்ஸ் அவர்கள் மினாஸ் ஜெரைஸில் உள்ள பெட்ரா பொனிடா பகுதியில் இருக்கும் அவருடைய வீட்டில் உயிரிழந்தார். இதையடுத்து ஜோஸ் கோம்ஸ் அவர்களுடைய உடல் பெட்ரா பொனிடா பகுதியில் உள்ள காரிகோ டாஸ் பியாஸ் ஹோஸ் என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

 

Previous articleபப்ஜி கேம் காதலனை சந்திக்க வந்த பாகிஸ்தான் பெண்… நடிகையாக மாற வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்!!
Next articleமஞ்சள் கறை படிந்த பற்களுக்கு குட்பை சொல்லிடுங்க!! இனி நன்றாக புன்னகை செய்யுங்கள்!!