பப்ஜி கேம் காதலனை சந்திக்க வந்த பாகிஸ்தான் பெண்… நடிகையாக மாற வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்!!

0
45

 

பப்ஜி கேம் காதலனை சந்திக்க வந்த பாகிஸ்தான் பெண்… நடிகையாக மாற வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்…

 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் பப்ஜி கேம் காதலனை சந்திக்க இந்தியா வந்ததை அடுத்து பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அந்த பெண்ணுக்கு தயாரிப்பாளர் ஒருவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது 4 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது பப்ஜி கேம் காதலனை சந்திக்க வந்த சீமா ஹைதர் தற்பொது நொய்டாவில் வசித்து வருகிறார். தனது காதலன் சச்சினை மறுதிருமணம் செய்து கொண்டதாகவும் அறிவித்தார்.

 

சீமா ஹைதர் அவர்கள் தனக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள நிலையில் அவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவாளியா என்ற எண்ணத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் சீமா ஹைதர் அவர்களை கண்காணித்து விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட இந்த காதல் ஜோடியின் பொருளாதார நிலை இன்றைய நாளில் கேள்விக் குறியாக மாறியுள்ளது. இந்த காதல் ஜோடிகள் எங்கும் வேலைக்கும் செல்லாமல் இருக்கும் காரணத்தால் இவர்கள் உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

தற்பொழுது உத்திரப் பிரதேச மாநிலம் நவநிர்மான் சேனா தலைவர் அமித் ஜானி அவர்கள் இந்த காதல் ஜோடிக்கு உதவி செய்வதற்கு முன்வந்துள்ளார். இது தொடர்பாக அமித் ஜானி அவர்கள் “எனது சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் திரைப்படத்தில் சீமா ஹைதர் மற்றும் சச்சின் இருவரையும் நடிக்க வைப்பேன்.

 

உதய்ப்பூரை சேர்ந்த தையல்காரர் கன்னையா லால் சாஹூ என்பவர் கொலை செய்யப்பட்டத்தை மைய்யமாக வைத்து திரைப்படம் எடுத்துள்ளேன். இந்த திரைப்படத்திற்கு ‘ஒரு தையல்காரன் கொலைக் கதை’ என்று பெயர் வைத்துள்ளேன். ஒரு தையல்காரன் கொலைக் கதை திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததை நான் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளேன். சீமா ஹைதர் அவர்களை சினிமாவில் நடிக்க வைக்க எனது உதவியாளர்கள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்” என்று கூறினார்.