உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

0
245

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.

55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உயர்மட்ட குழு. இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது பாகிஸ்தான் சட்ட கமிஷன். எனவே இவர் பாகிஸ்தானின் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாக விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிஷா மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதன் முதலாக பரிந்துரைக்கப்பட்டது.  ஆனால், மற்ற நீதிபதிகளை காட்டிலும் குறைவான வயதுடையவரை ஏற்க முடியாது என வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரின் பெயர் பரிந்துரையில் உறுதியாக இருந்தால் சட்ட கமிஷனை புறக்கணிக்க இருப்பதாக பார் கவுன்சில் அறிவித்தது.

நீதிபதி ஆயிஷா சீனியாரிட்டி அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளதால் அவரை சுப்ரீம் கோர்ட்டுக்கு முதலில் அனுப்புவது தவறு என பாகிஸ்தான் பார் கவுன்சில் கூறியது. இந்த நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில், நீதிபதி ஆயிஷாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.

Previous articleபொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு!
Next articleஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here