பெண்கள் மாதவிடாய் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.இப்பொழுது பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கிறது.இதனால் உடல் மற்றும் மன அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு குணமாக வாழைப்பூவில் ஜூஸ் மற்றும் சூப் செய்து குடிக்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)வாழைப்பூ
2)பனங்கற்கண்டு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு வாழைப்பூவை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்திருக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த வாழைப்பூ ஜூஸை கிண்ணத்திற்கு வடிகட்டி சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சீக்கிரம் பீரியட்ஸ் வந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)வாழைப்பூ
2)சீரகம்
3)மஞ்சள் தூள்
4)மிளகுத் தூள்
5)இந்துப்பு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும.அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கிய வாழைப்பூவை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்துக் கொளல் வேண்டும்.பின்னர் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து கொதிக்க வைத்து மூன்றுவேளை குடித்தால் ஒரே நாளில் மாதவிடாய் வந்துவிடும்.