Home State பெட்ரோல் டீசல் விலை! சற்றே நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் டீசல் விலை! சற்றே நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!

0
பெட்ரோல் டீசல் விலை! சற்றே நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்த்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன இந்த எண்ணெய் நிறுவனங்கள்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் பிரச்சாரத்தின்போது தற்போது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருந்தார்.இருந்தாலும் ஆட்சிக்கு வந்த பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது பொதுமக்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது வாகன ஓட்டிகளும் இதனை தெரிவித்து புலம்பி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 92 காசுக்கும் டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாய் 24 காசுக்கும் விற்பனை ஆகி வருகிறது.