பிரியாணி பிரியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!! உயிருக்கு எமனாக மாறும் பிரியாணி!!

0
156

இன்று நாட்டில் பெரும்பாலோரின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப் போடுகிறது இந்த பிரியாணி. ஐ.டி கலாச்சாரம் என்ற முறையில் இதை கூறிக்கொண்டு அனைவரும், அதன் பின்னே செல்கின்றனர். ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் , மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள்.

பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதி என்று கூறி சுற்றிதிரிகிறார்கள். இப்படி ஐ.டி கலாச்சாரம், நம்மிடம் மேலைநாட்டு பழக்கங்களை புகுத்தி வருகின்றது. இதில் புதிதாக இணைந்திருப்பது நள்ளிரவு பிரியாணி. இரவில் பணியாற்றும் ஐ.டி துறையினர்க்காகவே நள்ளிரவில் நிறைய ஹோட்டல்கள் இயங்குகின்றன.

டீ ,காபி தயாரிக்கும் ஓட்டல்கள் அதிகமான இயங்குவதில்லை, 3:00 மணிக்கு கூட சூடான பிரியாணி மட்டுமே கிடைக்கும். அதுவும் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி சிக்கன், மட்டன் என்று வகை வகையான பிரியாணிகள் சூடாக பரிமாறப்படுகிறது. பிரியாணி மட்டும் அல்லாது சிக்கன் 65 ,சிக்கன் கபாப் ,சிக்கன் தந்தூரி போன்ற காரசார உணவுகள் உள்ளன.

அதிகப்படியான ஊழியர்களை நள்ளிரவு பிரியாணி கடைகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. இரவு பணியில், பசியை உணரும் போது அவர்களுக்கு முன் பிரியாணி மட்டுமே தெரிகிறது. தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்க செய்கிறார்கள். இருந்தாலும், நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிக கேடாக அமையும் பொருட்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளை உருவாக்குவது.

ஒரு மனிதனின் இயல்பான இயக்கத்தை சீர்குலைத்துவிடும். பீட்சா, காரமான இறைச்சி, நூடுல்ஸ், பாஸ்தா, சாக்லேட், சோடா பானங்கள் ஆகியவை உடலுக்கு மிகவும் கேடு. கண்விழித்து பணியாற்றுபவர்கள் இரவு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவது மிக நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

author avatar
Jayachithra