சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்!

0
91
Permission to go to Sabarimala! Online Booking!
Permission to go to Sabarimala! Online Booking!

சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்!

கேரள மாநிலத்தில் இருக்கும் சுவாமி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல மகர கால பூஜை நடப்பது வழக்கம்.அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்று தரிசனம் பெற்று வருவார்கள்..

ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலம் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களை தரிசனம்  அனுமதிக்கவில்லை.கடந்த வருடம் மகர மண்டல பூஜை ஆன்லைன் மூலம் 1000 முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி தந்தனர்.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இது தவிற 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டததோடு பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை விதித்தனர்.அதற்கு பதிலாக பம்பை தண்ணிரில் ஷவர் மூலம் குளிக்க அனுமதி என்று கூறினர்.அதன் பிறகு பக்தர்கள் கோரிக்கையை ஏற்று தினமும் 2000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 3000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மாதாந்திர பூஜைக்காக நடைத்திறக்கப்பட்ட போது கொரோனா பரவலின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.கடந்த சித்திரை மாதம் மண்டல பூஜைக்காக நடைத்திறக்கப்பட்ட சமயத்தில் ஏப்ரல்11  ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பிறகு கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதால் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை.இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மூன்று மாதங்களுக்ககுப் பிறகு பக்தர்களை ஐயப்பனை தரிசனம் செய்ய  கேரள அரசு முடிவு செய்துள்ளது.ஆடி மாத பூஜைகளுக்காக வரும் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைத்திறக்கப் படுகிறது.

17 ஆம் தேதி அதிகாலை முதல் வரும் 21 ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்க்கு  அனுமதிக்கப்பட உள்ளனர்.தினமும் 5000 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

இதற்காக sabarimalaonline.org என்ற இணையத்தில் பதிவு செய்து சபரிமலை ஐயப்பனின் அருளைப் பெற ஜூலை 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் புக்கிங் தொடங்குக்கிறது.கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுச் சான்றிதழ் எடுத்துக்கொண்டு வருபவர்களை மட்டும் தரிசனத்திற்காக அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

author avatar
Parthipan K