100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

0
161

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நினைவிக்கும் நடைமுறை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாறுதல் இல்லாமல் இருந்து வந்தது இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் நேற்றைய தினம் பெட்ரோல் விலை 102 ரூபாய் 23 காசுக்கும், டீசலின் விலை 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை ஆகியது. இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனையாகி வருகிறது.

Previous articleஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்களிலேயே ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை!
Next articleஅவ்னி சினிமாஸில் மலரும் தாமரை!! குஷ்புவின் புதிய அவதாரம்!!