இரண்டு வார காலமாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை!

0
217

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றனர். நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 49காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

Previous articleசசிகலா எடுத்த அதிரடி முடிவு! கடும் கொந்தளிப்பில் அதிமுகவினர்!
Next articleநோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here