அடுத்த நான்கு தினங்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை!

0
113

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல நாளை முதல் வரும் 3ஆம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, உதகை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே போல மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வாகனம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

Previous articleநோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!
Next articleதமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!