பெட்ரோல் மற்றும் டீசல் விலை! சற்று நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!

0
168

இந்தியாவை பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்துவரும் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்துவிடுகின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகப்படுத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவற்றில் இன்றையதினம் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 97 ரூபாய் 69 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 96 ரூபாய் 92 காசுக்கும் விற்பனையாகி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதமிழகத்தில் கன மழை பெய்ய இருக்கும் இரண்டு மாவட்டங்கள்!
Next article9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here