கொத்து கொத்தாய் கொட்டும் முடி கட கடனு வளர வைக்க வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்தால் போதும்!! அற்புத ஹேர் மாஸ்க் ரெடி!
பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லோருக்கும் அடர்த்தியான,அழகான முடி காணப் படுவதில்லை.இதற்கு உணவு முறை மாற்றம்,பொடுகு பிரச்சனை,அரிப்பு, தலையில் சேரும் அழுக்கு உள்ளிட்டவை காரணமாக பார்க்கப்படுகிறது.
தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு நல்ல தீர்வாகும்.வெந்தய விதைகளில் அதிகளவு வைட்டமின் A,C மற்றும் K நிறைந்து காணப்படுகிறது.இந்த சிறிய விதைகளில் தலை முடிகளுக்கு தேவையான போலிக் அமிலம்,புரதங்கள் இருப்பதினால் இவற்றை பயன்படுத்தி வருவதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
* வெந்தயம் – 3 தேக்கரண்டி
* இஞ்சி – 1 துண்டு
செய்முறை:-
1.முந்தின நாள் இரவு ஒரு பாத்திரத்தில் வெந்தயத்தை ஊற வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து தலை முடிகளுக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு நன்கு தேய்த்து கொள்ள வேண்டும்.
2.அடுத்த நாள் காலை ஊறவைத்த வெந்தயம் மற்றும் அதன் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ள வேண்டும்.
3.பிறகு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அதன் சாற்றை வடிகட்ட வேண்டும்.
4.அரைத்து வைத்துள்ள வெந்தய பேஸ்ட் மற்றும் இஞ்சி சாற்றை கலக்கி தலை முடிகளின் வேர் பகுதிகளில் படும் படி தடவ வேண்டும்.
5.பிறகு 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பிறகு தலைமுடியை நன்கு அலச வேண்டும்.இந்த ஹேர் மாஸ்க் உங்களின் அடர்த்தியான கூந்தல் பற்றிய கனவை விரைவில் நனவாக்கும்.