ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

0
77

ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி செய்தால் மொறு மொறுனு சுவையாக இருக்கும்!

அதிக இரும்பு சத்து அடங்கியுள்ள கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுக்கிறது.நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் கம்பில் கூல்,களி,தோசை,புட்டு என்று செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

கம்பில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் செரிமான கோளாறுகள்,வயிற்று புண் இருப்பவர்கள் இவற்றை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.பெண்களின் மாதவிடாய் காலங்களில் இந்த கம்பில் கூல் செய்து குடிப்பது நல்லது.கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி இயற்கையாகவே இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இரத்த சோகை இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு கம்பை உணவாக எடுத்து வருவதன் மூலம் அவை விரைவில் குணமாகும்.அரிசியை விட கம்பில் சுமார் எட்டு மடங்கு இரும்பு சத்து அடங்கியுள்ளது.இதில் உள்ள புரதச்சத்து தலை முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்:-

*கம்பு மாவு – 1 கப்

*கோதுமை மாவு – 2 தேக்கரண்டி

*பச்சரிசி மாவு – 2 தேக்கரண்டி

*உப்பு – தேவைக்கேற்ப

*தயிர் – 2 குழி கரண்டி

செய்முறை:-

1. ஒரு பாத்திரம் எடுத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் தோசைக்கல் வைத்து கலக்கி வைத்துள்ள மாவில் தோசை வார்க்க வேண்டும்.சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் நன்கு வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த சத்தான கம்பில் அடிக்கடி தோசை செய்து உண்டு வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.