மீசை தாடி வேகமாக வளர ஒருவாரம் இதை தடவினால் போதும்!

0
198

மீசை தாடி வேகமாக வளர ஒருவாரம் இதை தடவினால் போதும்!

ஒரு சிலருக்கு மீசை தாடி அதிகமாக வளராது. அது அவர்களுக்கு ஒரு குறை போலவே தோன்றிக் கொண்டிருக்கும்.இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் மீசை தாடி வைப்பது மிகவும் விரும்பி கொண்டிருக்கிறார்கள்.

ஹார்மோன் இன்பேலன்ஸால் சரியாக முடி வளர்ச்சி இல்லாதவர்கள் இந்த முறையை பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் உங்கள் மீசையும், தாடியும் வளர்வதை காணலாம்.

தேவையான பொருட்கள்:

1.கருவேப்பில்லை வெயிலில் உலர்த்தியது.

2. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்

3. ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்.

செய்முறை:

1. கருவேப்பிலையை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து கொள்ளவும்.

2. பின்னர் அந்த பொடியுடன் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

3. அதனுடன் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை ஊற்றவும்.

மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும். நன்றாக ஒரு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளவும்.

இந்த முறையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது ஒரு வாரம் முழுவதும் நீங்கள் உங்கள் தாடி மீசையை ஷேவ் செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் தாடி மற்றும் மீசையை சேவ் செய்ய வேண்டும். ஏனெனில் ஏற்கனவே மலர்ந்த பூனை முடிகள் மற்றும் மெல்லிய முடிகள் புதிதாக முடி வளர்வதை தடுக்கும் என்பதனால் தாடி மீசையை எடுத்து விடவும்.

ஸ்டீம் பாத் எடுக்க வேண்டும். ஸ்டீம் பாத் எடுக்கும் பொழுது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் வியர்வைள் எல்லாம் வெளியேறி முகத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி விடுகிறது.

அதற்குப் பின் அந்த பேஸ்டை தாடி மீசை பகுதிகளில் பூசி இரவு முழுவதும் விட்டுவிடலாம். ஒருமணி நேரம் கழித்து கழுவி விடலாம்.

இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர புதிதாக முடிகள் மிகவும் வளரும். மேலும் வெள்ளை முடிகள் வருவதைத் தடுத்து கருமையான முடிகள் வளரும்.

கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு மிகவும் அதிகமாக உதவுகிறது.மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் முடியை மறுபடியும் புத்துணர்வு பெற்று வளர செய்கிறது. ஆமணக்கு எண்ணெயில் ஒமேகா-3 அமிலங்கள் உள்ளதால் அது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இதை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் உங்களை மீசை மற்றும் தாடி முடிகள் வளர்வதை கண்கூடாக காணலாம்.

Previous articleஎந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 12.08.2020
Next article15 நாளில் சைனஸ் மற்றும் டஸ்ட் அலர்ஜி பிரச்சனை குணமாகவேண்டுமா:! அப்போ இதை குடிங்க! இயற்கை முறை