இந்த பேஸ்டை ஒரு முறை மட்டும் தடவுங்கள்.. பாத வெடிப்பு அப்படியே மறைந்துவிடும்!!

Photo of author

By Rupa

இந்த பேஸ்டை ஒரு முறை மட்டும் தடவுங்கள்.. பாத வெடிப்பு அப்படியே மறைந்துவிடும்!!

அதிக மணி நேரம் தண்ணீரில் வேலை செய்யும் நபர்களுக்கு இந்த பாத வெடிப்பானது சீக்கிரமாகவே வந்து விடும் குறிப்பாக பாத வெடிப்பு வந்து விட்டார் அதன் வலி அதிகமாகிவிடும். தண்ணீரில் வேலை செய்வதனால் மட்டும் இன்றி உடல் பருமன் கால் வறட்சி போன்ற காரணங்களினாலும் பாத வெடிப்பு வந்துவிடும்.

பாத வெடிப்பு வந்து விட்டால் அதற்கு உரித்த மருத்துவத்தை மேற்கொண்டால் மட்டும்தான் விளைவுகள் ஏதேனும் சந்திக்காமல் இருக்க முடியும். பாத வெடிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை
மருதாணி இலை
மஞ்சள்

மஞ்சளானது கிருமி நாசினையாக பயன்படுகிறது.
மருதாணி நமது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு காலில் வரட்சி இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
அகத்திக்கீரை வெட்டுப்பட்ட காயங்களுக்கு மருந்தாக பயன்படும்.

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அகத்திக்கீரை மருதாணி இவை இரண்டையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தூங்குவதற்கு முன் இரவு நேரத்தில் வெடிப்புள்ள இடத்தில் தடவி வரவும.
இவ்வாறு செய்து வர பாத வெடிப்பு பாத எரிச்சல் அனைத்தும் குணமாகும்.