ஒரே இரவில் சூட்டு கொப்பளம் கரைய இதை மட்டும் தடவுங்கள்!
கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே அனைவரும் 5 லிட்டருக்கு மேல் தினசரி தண்ணீர் அருந்த வேண்டும். அதுமட்டுமின்றி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை பின்பற்றவில்லை என்றால் உடலானது உஷ்ணமாகி சூட்டு கொப்பளம் வயிற்றில் சூடு பிடித்துக் கொள்வது என அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக இந்த சூட்டு கொப்பளம் வந்துவிட்டால் அந்த இடம் சுற்றியும் வலி இருந்து கொண்டே இருக்கும். இதிலிருந்து ஒரே இரவில் விடுபட இதனை பின்பற்றினால் போதும்.
தேவையான பொருள்கள்:
கற்றாழை
சந்தனைப்பொடி
மஞ்சள் தூள்
தயிர்
கற்றாழையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் விட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது.
சந்தன பொடி ஆனது உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சி கொடுக்கும்.
மஞ்சள் தூள் ஆனது கிருமி நாசினியாக பயன்படுகிறது.
செய்முறை:
இரண்டு ஸ்பூன் தயிரை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் கற்றாழை ஜெல், மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
இரவு நேரம் இது தூங்குவதற்கு முன் சூட்டு கொப்பளம் இருக்கும் இடத்தில் இதனை தடவ வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஒரே இரவில் அந்த கொப்பளம் அப்படியே கரைந்து விடும்.