ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தருக்கும் பல வகையான ஸ்பேம் கால்ஸ் வந்துகிட்டே இருக்கு. இதை நிறுத்த நம்முடைய ஆண்ட்ராய்டு போன்லயே சூப்பர் செட்டிங் இருக்கு. ஆனால் இதுவரை யாரும் அதை கவனித்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஸ்பேம் கால்ஸ் பெரும்பாலான நேரங்களில் நம்முடைய நேரங்களை வீணாக்குகின்றது. மேலும் எரிச்சல் ஊட்டும் விதமாக சில நேரங்களில் மீண்டும் மீண்டும் இந்த கால் வந்து கொண்டே இருப்பதால் நம் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறலாம்.
இதனை சரி செய்ய நம்முடைய போனில் சுலபமான வழி உள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Caller ID மற்றும் Spam Protection ஆன் செய்வதற்கான வழிமுறைகள் :-
✓ இதற்கு, முதலில் நீங்கள் போனின் டயலர் அல்லது கால் ஆப்பிற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் மேல் வலது மூலையில் மூன்று டாட் இருப்பதை நம்மால் காண முடியும்.
✓ போனில் இப்பொழுது இங்கு மூன்று டாட் தெரியும், இங்கு மூன்று டாட்டில் க்ளிக் செய்ய வேண்டும்.
✓ இப்பொழுது,
இங்கு உங்களின் Caller ID மற்றும் Spam Protection யின் ஆப்சன் தெரியும், இதை அழுத்த வேண்டும் அதன் பிறகு அதில் சில ஆப்சன் வரும்.
✓ அதன் பிறகு செட்டிங்கில் ஆன் செய்யவும்.
சில ஆண்ட்ராய்டு போன்களில், ஸ்பேம் நம்பர்களை அடையாளம் காண, செட்டிங் இயக்குவதற்கான ஆப்சன் உள்ளது.
✓ இதற்குப் பிறகு, ஸ்பேம் கால் பிள்ட்டரின் விருப்பத்தை ஆன் செய்ய வேண்டும்.
இந்த செட்டிங்கிர்க்கு பிறகு, ஸ்பேம் கால்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
மேலும் இதனை தடுக்க மற்றொரு வழிமுறையும் உள்ளது. நம்முடைய ஆண்ட்ராய்டு போனில் ட்ரூகாலர் ஆப்பினை டவுன்லோடு செய்வதன் மூலம் ஸ்பேம் கால்களை நம்மள அடையாளம் காண முடியும் மற்றும் உங்களுடைய டெலிகாம் ஆப்ரேட்டர்களினிடையே கோரிக்கை வைத்து டிஎன்ஏ சேவையை பெற்று இதனை குறைக்க முடியும்.