1 பட்டனை கிளிக் செய்தால் போதும்.. பணியிட மாறுதல் வாங்கிக்கொள்ளலாம்!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!
இந்த வருடத்திற்கான ஆசிரியர் பணியிட மாற்றம் குறித்து கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானதை அடுத்து இதனை இணையதளம் மூலம் அதாவது பள்ளிக்கல்வித்துறை தலைமையில் எமிஸ் வாயிலாக வெளிப்படை தன்மையுடன் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் எமிஸ் இணையதள உதவியுடன் இம்முறை இந்த கலந்தாய்வானது மே 8 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வானது ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்கநிலை பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் ஓராண்டாவது பள்ளியில் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த புதிய வரைமுறையையும் இம்முறை தான் கொண்டு வந்துள்ளனர். எனவே இந்த பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிடம் மாறுதல் குறித்து யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
மேலும் இணைய குழு வலைத்தளம் ஆனது இதற்கென்று புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் எந்தெந்த ஆசிரியர்கள் தங்களது பணியிடத்தை மாற்ற விரும்புகிறார்களோ அதனை கலந்தாய்வு நடப்பதற்கு முன்பாகவே தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி பணியிடம் மாற்றம் செய்ய விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விருப்பத்தினை தெரிவிக்கும் வகையில் 12 வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்றும் அதனை வரிசைப்படுத்தி தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
முன்பெல்லாம் பொது கலந்தாய்விற்கு சென்றால் மட்டுமே தான் எந்தெந்த இடங்களில் காலி பணியிடங்கள் உள்ளது என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த எமிஸ் இணைய குழு வலைத்தளம் மூலம் எந்தெந்த இடத்தில் பணியிடங்கள் உள்ளது என்பதை அவர்களின் செல்போன் மூலமே அறிந்து கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளனர்.
இதன் மூலம் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரிய விருப்பமுள்ள மாவட்டத்தில் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதனை பிரீ செலக்சன் செய்து கொள்ளலாம். அவ்வாறு ஆசிரியர்கள் பிரீ செலக்சன் செய்து வைத்து விட்டால் அது வேறொருவர் செலக்ட் செய்து விட்டார் என்ற வகையில் ரெட் கலர் மார்க்குடன் காட்டும்.
இதனை மற்ற ஆசிரியர்கள் பார்த்து, மீதமுள்ள காலி பணியிடங்களை உபயோகித்துக் கொள்ளலாம். இந்த வசதி வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் தற்பொழுது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் திட்டமிட்டு தங்களது பணி மாறுதலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.