இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்

0
278

 

இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்!!

கடந்த இரண்டு வருடங்களாக லாக் டவுன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடுதிப்பென்று இப்போது தினம்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்ற கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். பாடம் படிக்க வேண்டும் என்றாலே பிள்ளைகள் ரொம்ப கஷ்டமாக படிக்கணுமா என்று கேட்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வமே போய்விடும். இது போன்ற படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் ,ஞாபக சக்தி குறைவும் மற்றும் அறிவாற்றல் குறையவும் வாய்ப்புள்ளது.
நம்பிக்கை உள்ளவர்கள் இப்பதிகாரத்தின் மூலம் நன்மை அடையலாம். நினைவாற்றல் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்க புதன்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்தால் ஞாபக சக்தி மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும். இதைத்தொடர்ந்து புதன்கிழமை அன்று பகவானின் பாதங்களில் ஏலக்காயை வைத்து பிள்ளைகளின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைகள் அனைவரும் வீட்டில் படிக்கக்கூடிய நல்ல சூழ்நிலை ஏற்படும். குறிப்பாக வடக்கு திசையில் அமர வைத்து குழந்தைகளை படிக்க செய்வது நல்லது.

இதனால் குழந்தைகளுக்கு படிப்பில் உள்ள ஆர்வம் அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு தாய்மாமன் இருந்தால் அந்த தாய் மாமனோட இரண்டு நாட்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் ஏனென்றால் புதன் இடத்தை நிரப்புகின்ற பாகம் என கருதப்படுகிறது. குழந்தைகள் தாய் மாமனோடு சேரும்போது புதன் கிரகம் நீச்சம் பெற்றும் இருந்தாலும் அது சரியாகி பிள்ளைகள் பள்ளிக்கூடம் மற்றும் செல்வத்தில் அதிக கவனம் காட்டுவார். நம்பிக்கையோடு ஒரு சில விஷயங்களை முயற்சி செய்யும் போது நமக்கு நிறைய பலன் கிடைக்கும் மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றி பாருங்கள்.

Previous articleஹே கூகுள்’உடனே வந்து நிற்கும்!பொது மக்கள் ஆர்வம்!  
Next articleசமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்!