இதை மட்டும் செய்யுங்கள் இனி ஆயுசுக்கும் வாயு (குசு) தொல்லையே இருக்காது!!
நாம் உண்ணும் உணவு செரிக்கும் பொழுது குடற் பகுதியில் ஒரு வித வாயு உண்டாகும் இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் தொடர்ந்து வாயு பிரிந்து கொண்டே இருந்தால் நாம் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றும்பொழுது அதனை உடனடியாக செய்து விட வேண்டும். நமது குடலில் தேங்கி வைப்பதாலும் இவ்வாறான வாயு வெளியேறும். இந்த வாயு வெளியேறுவதால் பல இடங்களில் அவசௌகரியமாக உணர வேண்டியிருக்கும்.
அதேபோல நாம் எடுத்துக் கொள்ளும் பருப்பு ஸ்டார்ட்ச் நிறைந்த உருளைக்கிழங்கு வாழைக்காய் போன்றவை இன்னும் பொழுது அதிக அளவில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அதிகப்படியான வாயு உள்ளதால் நமது உடலுக்கு மேலும் உபாதைகளை ஏற்படுத்தும். அதேபோல தினசரி மோர் அண்ணாச்சி பழம் போன்றவை நமது உடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். இது வாயு வருவதை தடுக்கும். ஒரு சில மருந்து மாத்திரைகளாலும் வாயு பிரச்சனை உண்டாகலாம்.
வாயு பிரச்சனையை வீட்டு வைத்திய முறையில் சரி செய்வது எப்படி:
தேவையான பொருட்கள்:
இஞ்சி
துளசி இலை
செய்முறை:
மிக்ஸி ஜாரில் சிறு துண்டு அளவு இஞ்சி மற்றும் ஐந்து முதல் ஆறு துளசி இலைகளை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின்பு அரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை வடிகட்டி தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் அரை கிளாஸ் இருக்கும் குறைவாக குடித்து வரவேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் உடம்பில் உள்ள வாயு அனைத்தும் வெளியேறிவிடும்.