உடலில் தொங்கும் சதைகளை குறைக்க இதை மட்டும் ரெகுலரா செய்யுங்கள் போதும்!!

Photo of author

By Gayathri

நம் உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் மட்டுமே நோய்நொடி இன்றி வாழ முடியும்.இன்றைய காலத்தில் உடல் ஆரோக்யத்தை பேணிக் காக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று.நோய் பாதிப்புகள் எப்படி வருமென்று தெரியாத சுகதமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நமது உடல் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் உடல் பருமன் தான்.ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்,சோம்பேறி வாழ்க்கை முறையால் உடல் எடை கூடுகிறது.ஆண்,பெண் அனைவரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,ஹோட்டல் உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல்,எண்ணெய் உணவுகளை ருசித்தல் போன்ற காரணங்களால் உடல் எடை கூடுகிறது.

உடல் உழைப்பு இல்லாமை போனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து தொப்பை,கை மற்றும் தொடை சதை அதிகரித்துவிடும்.எனவே ஆரோக்கிய உணவுகளை உண்டு உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்க நீங்கள் செய்ய வேண்டியவை:

1)ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டு உணவுகளை சாப்பிட வேண்டும்.எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

2)தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி,தியானம்,உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

3)உடை எடையை குறைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.கொள்ளு உடை எடையை குறைக்க உதவும்.

4)சாப்பிட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் சாப்பாட்டு அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.நேரம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் உண்ண வேண்டும்.

5)அரிசி உணவுகளை மூன்று வேளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.