உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!

இன்றைய வளர்ச்சியடைந்த உலகில் தனி மனிதனுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்களும் உள்ளனர். தன் திறமையால் சாதாரண பள்ளிகளில் கல்வி கற்கும் பிள்ளைகளும் உள்ளனர்.

எவ்வாறு இருந்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது கல்வி மட்டுமே. இந்த கல்வியை நன்கு கற்க, தேர்வில் முதல் மதிப்பெண் பெற மாணவர்கள் ஒரு எளிய பரிகாரம் செய்வது அவசியம்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். அதுவும் படிக்கும் குழந்தை தான் செய்ய வேண்டும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள் அருகம்புல். இதை கடையில் இருந்து வாங்கி படிக்கும் பிள்ளைகள் தங்கள் கைகளால் வீட்டருகில் உள்ள பிள்ளையார் சிலைக்கு சாற்ற வேண்டும்.

தொடர்ந்து 11 நாட்கள் பிள்ளையாருக்கு அருகம்புல்லை வைத்து மனதார வழிபட்டு வந்தால் கல்வி அறிவு அதிகரிக்கும். ஒழுக்கச் செயல்கள் அதிகரித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற பிள்ளையாரின் ஆசி கிடைக்கும்.