GPay வில் மாற்றி அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் பெறுவதற்கு இதை செய்தால் போதும்!!

Photo of author

By Gayathri

GPay வில் மாற்றி அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் பெறுவதற்கு இதை செய்தால் போதும்!!

Gayathri

Just do this to get back the money transferred in GPay!!

தற்பொழுது upi transaction என்பது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய பண பரிவர்த்தனை தளமாக விளங்குகிறது. இதற்கு பெரும்பாலும் ஜி பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் ஜி பே வில் அதிக அளவு மக்கள் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பண பரிவர்த்தனையின் பொழுது தவறுதலாக வேறொருவருக்கு பணத்தினை அனுப்பிவிட்டால் அதனை மீண்டும் பெறுவதற்கான வழிமுறை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

தவறுதலாக ஜி பேயில் அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் :-

முதலில் அனுப்பப்பட்ட நபருக்கு போன் செய்து பேசி பெற முடிந்தால் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஜி பே கஸ்டமர் கேருக்கு கால் செய்து நடந்த விவரங்களை கூறி தங்களுடைய பணத்தை மீண்டும் பெறலாம்.

மேல் கூறப்பட்ட 2 வழிகளின் மூலமும் பணத்தினை திரும்ப பெற முடியவில்லை என்றால் இங்குள்ளதை பின்பற்றவும் :-

✓ NPCI என்ற ஆர்பிஐ போர்டல் பக்கமான npci.org.in வலைதளத்தில் நுழையவும்.
✓ what we do tap என்ற பக்கத்தில் நுழைய வேண்டும்.
✓ அதன்பின் UPI தேர்வு செய்து அதில் உள்ள Dispute Redressal Mechanism என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
✓ இந்த பக்கத்தில் தவறுதலாக பணம் அனுப்பப்பட்ட விவரங்களை உள்நுழைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் 24 அல்லது 48 மணி நேரத்திற்குள் உங்களுடைய பணம் மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கு வந்து சேரும். குறிப்பாக பணம் அனுப்பியவர் மற்றும் பெற்றவர் இருவரின் உடைய வங்கி கணக்குகளும் ஒரே வங்கியை சேர்ந்தவை என்றால் இந்த வேலை ஆனது மிக குறைந்த நேரத்தில் நடந்து முடிந்து விடும் என்றும் வேறு வேறு வங்கி கணக்குகளாக இருந்தால் சிறிது கால தாமதம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.