ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

0
147
#image_title

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒவ்வொருவரும் நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் அனைவரின் முகமும் அழகாக இருக்கிறதா? முகத்தில் கரும்புள்ளி,பருக்கள், வடுக்கள், தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் முகம் பொலிவற்று காணப்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களால் ஏற்படுகிறது. இந்த கரும்புள்ளி, தழும்பு உள்ளிட்டவைகள் மறைய இயற்கை வழிகளை பாலோ செய்வது நல்லது.

கரும்புள்ளி ஏற்படக் காரணம்:-

*அலர்ஜி

*அதிகப்படியான முகப்பரு

முகப்பரு நீங்க எளிய வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி

*வெள்ளரிக்காய் – 1 கீற்று

*உருளைக்கிழங்கு – 1

*பப்பாளி பழம் – 1 கீற்று

*பால் – 4 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 1 கீற்று பப்பாளி மற்றும் 1 கீற்று வெள்ளரியை தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விழுதாக்கி ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டவும்.

அதேபோல் 1 உருளைக்கிழங்கினை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விழுதாக்கி பப்பாளி சாறு, வெள்ளரி சாறு உள்ள கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அதில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 4 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் சில நாட்களில் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.

Previous article“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
Next articleநீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!