கண் பார்வையை கூர்மையாக்க இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரு வாரத்தில் கண்ணாடியை தூர வீசிடுவீங்க!!

Photo of author

By Divya

கண் பார்வையை கூர்மையாக்க இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரு வாரத்தில் கண்ணாடியை தூர வீசிடுவீங்க!!

Divya

குழந்தைகள்,பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் கண் கண்ணாடி அணிகின்றனர்.நமது முகத்தில் உள்ள உணர்திறன் மிக்க உறுப்பான கண்கள் இந்த உலகை காண உதவும் உறுப்பாக உள்ளது.கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் பலரும் கண் சம்மந்தபட்ட பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.பள்ளி செல்லும் வயதிலேயே தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை பிரச்சனையால் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த கண் பார்வை சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க தினமும் ஐந்து நிமிடங்கள் கண் பயிற்சி செய்ய வேண்டும்.இது தவிர உட்கொள்ளும் உணவின் மூலம் கண் பார்வையை அதிகரிக்கலாம்.

கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகள்:

1)கேரட்,பப்பாளி போன்றவை கண் பார்வையை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வையை அதிகரிக்கிறது.இதை தவிர்த்து பழங்கள்,காய்கறிகள்,பால் போன்றவற்றை உட்கொண்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

2)கால்சியம் சத்து நிறைந்த பாதாம் பருப்பு,ஓட்ஸ்,வால்நட் போன்றவை கண் பார்வை திறனை மேம்படுத்தும்.

3)வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த கோதுமை,முந்திரி மற்றும் பச்சை இலை காய்கறிகள் கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சனையை சரி செய்யும்.

4)ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்கள்,சியா விதைகள் மற்றும் உலர் விதைகள் கண் பார்வையை அதிகரிக்கும்.

4)சோயா பீன்ஸ்,வைட்டமின் பி 12 உணவுகள் மாற்றம் ப்ரோக்கோலி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் கண் பார்வை திறனை மேம்படுத்தலாம்.

5)வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.

6)முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது.சிட்ரஸ் பழங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.