ஒரு முறை குடித்தால் போதும் சளி மலத்தின் வழியாக வந்து விடும்!! இதோ எளிய பாட்டி வைத்தியம்!!

Photo of author

By Rupa

ஒரு முறை குடித்தால் போதும் சளி மலத்தின் வழியாக வந்து விடும்!! இதோ எளிய பாட்டி வைத்தியம்!!

ஒருவருக்கு சளி வந்து விட்டால் அவரால் சரிவர எந்த ஒரு வேலையும் செய்ய இயலாது. ஏனென்றால் அந்நாள் முழுவதும் மூக்கை அடைத்துக் கொண்டு உடலை சோர்வாகவே வைத்திருக்க செய்யும். அதேபோல சளி வந்துவிட்டால் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் ஆனால் தான் முழுமையாக குணமாகும்.ஆனால் பாட்டி வைத்தியத்தை பின்பற்றினால் ஒரே நாளில் சளியானது மலத்தின் வழியே வந்துவிடும்.எப்படி சளியை மலத்தின் வழியே வர வைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சளியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை -4
கற்பூரவள்ளி இலை 2
வர கொத்தமல்லி 1ஸ்பூன்
சுக்கு -சிறிதளவு
பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி

தூதுவளை இலை மற்றும் கற்பூரவள்ளி இலையானது சளியை கரைத்து வெளியே அனுப்ப உதவும்.
அதுமட்டுமின்றி இது நெஞ்சு சளி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
வரக்கொத்தமல்லி ஆனது தலையில் கோத்திருக்கும் நீர் போன்றவற்றை சரி செய்ய உதவும்.
தொடர் தும்மல் உள்ளவர்களுக்கு சுக்கு பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து சற்று நிவர்த்தி அடைய முடியும்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் ஆனது அரை கிளாஸ் வரும் வரை நன்றாக கொதித்த பிறகு அனைத்து விட வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது பருகலாம்.
இதனை ஒரு நாளில் காலை மற்றும் மாலை என இருவேளை குடிக்கும் பட்சத்தில் சலியானது கரைந்து மலத்தின் வழியே வெளியேறிவிடும்.