உடல் இளைக்க அரிசி ஊற வைத்த நீரை மட்டும் அருந்துங்கள் போதும்!! 30 நாட்களில் 100% ரிசல்ட் கன்பார்ம்!

Photo of author

By Divya

உடல் இளைக்க அரிசி ஊற வைத்த நீரை மட்டும் அருந்துங்கள் போதும்!! 30 நாட்களில் 100% ரிசல்ட் கன்பார்ம்!

உங்களில் பலர் உடலில் தேங்கிய கொழுப்புகளை கரைத்து உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருவீர்கள்.சிலர் குறைவாக உண்பது,சாப்பிடாமல் இருப்பதினால் உடல் எடையை குறைத்து எளிதில் குறைத்து விடலாம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு செய்வதினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு உடல் எடை மேலும் அதிகரிக்கத் தான் செய்யும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிலர் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பார்கள்.ஆனால் உரிய நேரம் இல்லாத காரணத்தினால் தினமும் உடற்பயிற்சி,நடைப்பயிற்சி,யோகா போன்றவற்றை செய்ய முடியாமல் போய்விடுகிறது.

எனவே உடல் எடையை எந்தவித சிரமமின்றி குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கப் அரிசி ஊறவைத்த நீர் அருந்தி வரலாம்.அரிசி நீர் உடல் எடையை தவிர செரிமானக் கோளாறு,வயிற்றுப்போக்கு,சரும பிரச்சனை,குடல் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

அரிசி நீர் எவ்வாறு தயாரிப்பது?

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி வெள்ளை அரிசி மற்றும் ஒரு கப் நீர் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.அதற்கு முன்னர் 2 அல்லது 3 முறை அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த அரிசியை 30 அல்லது 45 நிமிடங்களுக்கு ஊற வைத்த பின்னர் ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.

தினமும் அரிசி நீர் அருந்தி வந்தால் உடலில் படிந்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவது கட்டுப்படும்.