இதை மட்டும் குடியுங்கள்.. உங்கள் தொழு தொழு தொப்பையை எளிமையாக குறைக்கலாம்!!

Photo of author

By Divya

இதை மட்டும் குடியுங்கள்.. உங்கள் தொழு தொழு தொப்பையை எளிமையாக குறைக்கலாம்!!

Divya

Updated on:

Just drink this.. You can reduce your fat belly easily!!

இதை மட்டும் குடியுங்கள்.. உங்கள் தொழு தொழு தொப்பையை எளிமையாக குறைக்கலாம்!!

உடல் பருமனாக இல்லை ஆனால் வயிற்றுப்பகுதியில் மட்டும் கொழுப்பு அதிகமாக சேர்ந்து தொப்பை உருவாகிவிட்டது என்ற புலம்பல் பலரிடம் உள்ளது.இந்த தொப்பை கொழுப்பை குறைக்க முடியாமல் திணறும் நபர்கள் ஏராளம்.தொந்தி என்று அழைக்கப்படும் தொப்பை ஆண்,பெண்,வயதானவர்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை.இந்த தொப்பை கொழுப்பை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:

1)கொத்தமல்லி விதை
2)எலுமிச்சை சாறு
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 கிராம் கொத்தமல்லி விதை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

அதன் பின்னர் இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்திருக்கும் தொப்பை கொழுப்பு முழுமையாக கரைந்து உடல் பிட்டாக காட்சியளிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)எலுமிச்சை சாறு
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

அதன் பின்னர் இந்த சீரக நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்திருக்கும் தொப்பை கொழுப்பு முழுமையாக கரைந்து உடல் பிட்டாக காட்சியளிக்கும்.