அடடே டெயிலி மார்னிங் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிடுவதால்.. உடலில் அதிசயம் நிகழுமா!!

Photo of author

By Divya

அடடே டெயிலி மார்னிங் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிடுவதால்.. உடலில் அதிசயம் நிகழுமா!!

Divya

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்பிலை மிகவும் முக்கியமான மூலிகையாக பயன்படுத்தபட்டு வருகிறது.இந்த வேப்பிலையில் அலர்ஜி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

வேப்பிலை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.அலோபதி மருந்தை விட நம் நாட்டு மூலிகையாக திகழும் வேப்பிலை அதிக பவர் கொண்டவையாகும்.தினமும் ஒரு கொத்து வேப்பிலை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் நோய் நொடியின்றி வாழலாம்.வேப்பிலை போன்ற வேப்பம் பூ,வேப்பம் பட்டை மற்றும் வேப்பங்குச்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.

காலை நேரத்தில் வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.வேப்பிலையை பொடியாகவோ அல்லது ஜூஸாக செய்து பருகலாம்.

2)வேப்பிலை சாறு செரிமான பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது.வேப்பிலையில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் உடலில் வாயுக்கள் உருவாவதை கட்டுப்படுத்துகிறது.

3)வயிறு மந்தம்,மலச்சிக்கல்,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாக வேப்பிலை சாறு செய்து பருகலாம்.

4)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வேப்பிலை சாறு கொடுக்கிறது.ஜலதோஷம் மற்றும் தொண்டைப்புண் பாதிப்பை சரி செய்ய வேப்பிலை சாறு பருகலாம்.

5)வாய்ப்புண் மற்றும் அல்சர் பாதிப்பில் இருந்து மீள தினமும் காலையில் வேப்பிலை சாப்பிடலாம்.

6)வாய் சுகாதாரம் மேம்பட வேப்பிலை உட்கொள்ளலாம்.பல் சொத்தை,வாய் துர்நாற்றம்,ஈறுகளில் இரத்த கசிவு போன்றவற்றை குணப்படுத்த வேப்பிலை பொடியை கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.

7)இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்க வேப்பிலை சாறு பருகலாம்.தினமும் ஒரு கிளாஸ் வேப்பிலை சாறு பருகி வந்தால் இரத்த ஓட்டம் மேம்படும்.

8)வேப்பிலையை தொடர்ந்து உட்கொண்டால் முடி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.சருமம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்ய வேப்பிலை எடுத்துக் கொள்ளலாம்.