ஆரோக்கியமான உறக்கம் கிடைக்க.. இந்த 5 டிப்ஸை பாலோ செய்தாலே போதும்!!

Photo of author

By Divya

இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.மோசமான உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் உடல் ஆரோக்கியத்தை இழக்கிறது.பகல் நேர உறக்கம்,இரவில் மொபைல் பயன்பாடு,தாமதமான இரவு உணவு,மன அழுத்தம்,வேலைப்பளு போன்ற காரணங்களால் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும்.

டிப் 01:

இரவு உணவை 8 மணிக்கு முன்னர் சாப்பிட வேண்டும்.எளிதில் செரிமானமாகக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.இதனால் வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிறு மந்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்த்து நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.

டிப் 02:

தினமும் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.இரவு 10 மணிக்குள் உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

டிப் 03:

தூங்கும் நேரத்தில் மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.சத்தம் இல்லாத ஆரோக்கியமான உறக்கம் கிடைத்தால் மட்டுமே மறுநாள் உடல் புத்துணர்வுடன் இருக்க முடியும்.

டிப் 04:

இரவில் சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.சாப்பிட்ட உடன் உறங்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.

டிப் 05:

உறக்கத்திற்கு முன்னர் மது மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் தூக்கம் கெடுவதோடு உடல் ஆரோக்கியம் பாதித்துவிடும்.உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து வெந்நீரில் குளியல் போட்டுவிட்டு பிறகு உறங்கலாம்.