இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!..
ஜப்பானில் உள்ள ஒரு இளைஞன் அசத்தலான செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞன் ஒருவன் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார்.
டோக்கியை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞன் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளார். இத்தொழிலுக்காக தன்னைத்தானே வாடகைக்கும் விட்டார்.
கடைக்கு செல்வதற்கு விளையாடுவதற்கும் எளிதான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றால் தன்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பின்னர் அவர் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன் என்றும் பாலியல் ரீதியாகவோ தன்னை அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவேன் என்றார்.
மேலும் அவர் வாடிக்கையாளர்களிடம் மனக்குறைகளை கேட்டும் அவர்களின் பொழுதை கழிப்பதற்காக மட்டுமே செல்வதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்த இளைஞரை பலர் வாடகைக்கு முன்பதிவு செய்ய போட்டி போட்டு பதிவு செய்கின்றார்கள்.
முதலில் நூறு இருநூறு பேர் தான் அவரை பின்தொடர்ந்தனர். ஆனால் இப்போது பிரபலமாகி லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த தகவல் பல ஊடகங்களில் பரவி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.