சிறுமியிடம் கைவரிசையை  காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சிறுமியிடம் கைவரிசையை  காட்டிய போதை ஆசாமி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்தவர் சுமன் .இவர் தனது மகன் மற்றும் மகள் என்று  குடும்பத்தோடு  அருகில் இருக்கும் புத்தக கடைக்கு  சென்றார் . சுமன் அவரின் மகளுக்கு  பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அனைவரும் கடைவீதிக்கு சென்றனர். அப்பா முன்னே செல்லவே அம்மா மற்றும் தன் குழந்தைகளுடன் பின்னாடி கடைகளை சுற்றி பார்த்த படியே   வந்தனர் .அப்போது அங்கு இருந்த குடிபோதை  ஆசாமி ஒருவர் ரோட்டில் குடித்து விட்டு  அங்கும் இங்குமாக சென்று பல சேட்டைகளை செய்து சுற்றி திரிந்து வந்துள்ளார்.அப்போது வேப்பமூடு சந்திப்பிலிருந்து மணிமேடை நோக்கி அவர் குடுபத்தினர் நடந்து சென்ற போது அருகில்  ஆட்டம் போட்ட குடிபோதை  ஆசாமி ,சுமன் மகளை தொந்தரவு செய்து வந்திருந்தார்.

குழந்தை பயந்து போய் கூச்சல் போடவே  முன்னே சென்ற அவள் அப்பா ஓடி வந்து குடிபோதை   ஆசாமியை கடுமையாக தாக்கினார்.தாக்கியதில் குடிபோதை  ஆசாமி அவரை தீய வார்த்தைகளால் திட்டினார் .மேலும் கோபம் அடைந்த  சுமன் அதிக ஆத்திரமடைந்து கையில் கிடைத்ததை எடுத்து தாக்கினார்.பின்னர் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி கோபத்தை குறைத்தனர். சில பேர் குடிபோதை  ஆசாமியை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த காட்சி அங்கு அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.சமூக வலைத்தளங்களில்  மிக வேகமாக பரவி வருகிறது.

Leave a Comment