இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

0
252
#image_title

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய நோயாக கருதப்படுவது இந்த மூட்டுவலியாகும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருந்தால் மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. 30 வயதிற்கு மேல் இந்த மூட்டு வலியானது வந்தால் அவர்களுக்கு உடம்பில் போதிய அளவு சத்துக்கள் இல்லையென்றும் கால்சியம், பி12 ,இரும்புச்சத்து ,போன்ற குறைபாடுகள் இருக்கின்றன . எனவும் அறிந்து கொள்ளலாம்.முதலில் 3 ஸ்பூன் அளவு ஓமத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 3 ஸ்பூன் அளவு வெந்தயம்,2 ஸ்பூன் அளவு கருஞ்சீரகம் இவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

கருஞ்சீரகத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் மிக்கது. சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளும். இது நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நம் உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி நல்ல கொழுப்புகளை கொடுக்கக்கூடியது. ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கும் அது மட்டுமல்லாமல் எலும்புகளை வலுப்படுத்தி சீராக இயக்கச் செய்யும். மேலும் மூட்டுகளில் உள்ள பிரச்சனைகளை குணமாக்குகிறது.

ஆனால் இந்த கருஞ்சீரகத்தை அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும். சேர்த்துள்ள ஓமமானது அஜீரண கோளாறு வாயு பிரச்சனை போன்றவற்றை சரி செய்யும் இதில் அதிகப்படியான இரும்புச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. மேலும் இதில் பயன்படுத்தியுள்ள வெந்தயத்தில் அதிகப்படியான நார்ச்சத்தும் ,கால்சியம் சத்தும், இரும்பு சத்தும், உள்ளது. இந்த வெந்தயம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் மலச்சிக்கலை தீர்க்கும். வறுத்து முடித்த பிறகு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் கால் டீஸ்பூன் அளவு நாம் அரைத்து வைத்திருந்த பவுடரை சேர்க்க நன்றாக கலந்து இரவு தூங்கு போகும் முன் குடித்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது எலும்புகள் வலி பெறும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளும் குணமாகிறது.

Previous articleபித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!
Next articleமாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!