60 ல் கூட 20 போல் இருக்க ஒரு டம்ளர் பாலில் இதை கலந்து குடித்தால் போதும்!!
30 வயது கடந்து விட்டாலே மூட்டு தேய்மானம் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வந்து விடுகின்றது. இதனை எல்லாம் தடுக்க மருந்து மாத்திரைகளை எடுக்க ஆரம்பிப்பதோடு ஆரம்ப கட்டத்திலேயே உணவில் மாற்றத்தை கொண்டு வந்தால் நாளடைவில் பெரும் பிரச்சனைகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அந்த வரிசையில் பலருக்கும் உள்ள பிரச்சனைதான் நரம்பு தளர்ச்சி. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் 60 வயதில் கூட 20 வயதை போல் நடமாடலாம்.
தேவையான பொருட்கள்:
வால்நட்
உலர் திராட்சை
கற்கண்டு
பசும் பால்
வால்நட்டானது நமது இதயம் மற்றும் கொலஸ்ட்ராலை கரைக்க மிகவும் உதவும். அதேபோல உலர் திராட்சையில் மெக்னீசியம் பொட்டாசியம் அயன் போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த உலர் திராட்சையானது ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது.
செய்முறை:
ஒரு டம்ளர் பாலை வெதுவெதுப்பாக சூடு படுத்த வேண்டும்.
பின்பு அந்தப் பாலில் உலர் திராட்சை வால்நட் இவை அனைத்தும் நான்கு அல்லது ஐந்து என்ற கணக்கில் சேர்க்க வேண்டும்.
பின்பு இனிப்பு சுவைக்காக சிறிதளவு கற்கண்டு சேர்க்க வேண்டும்.
தினம்தோறும் காலையில் இந்த ஊட்டச்சத்து மிகுந்த பாலை எடுத்துக் கொண்டால் நரம்பு தளர்ச்சி எலும்பு தேய்மானம் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.