ஜஸ்ட் ஆதார் கார்டு ஒன்று போதும்! ரூ 2 லட்சம் வரை கடன் பெறலாம்! 

Photo of author

By Rupa

ஜஸ்ட் ஆதார் கார்டு ஒன்று போதும்! ரூ 2 லட்சம் வரை கடன் பெறலாம்! 

ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாக இருக்கும். எங்கே செல்வதனாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய , மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை சாப்ட் காப்பி வடிவில் செல்போனில் வைத்துக்கொள்ள முடியும் .

டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது. ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  மேலும் ஆதார் அட்டை மற்றும்  பான் கார்டு பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு.

இப்போது வெறும் ஆதார் அட்டை இருந்தாலே போதுமாம். இதை மட்டும் வைத்து, வீட்டில் இருந்தபடியே 2 லட்சம் வரையிலான தனிநபர் கடனை பெறலாம் என்கிறார்கள்.

இப்போது பெரும்பாலான வங்கிகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி e-KYC செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன் செயல்முறை மிகவும் எளிமையானது.

விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிது ஸ்டேட் வங்கி, HDFC வங்கி மற்றும் கோடக் மஹேந்திரா வங்கி போன்ற பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வெறும் ஆதார் அட்டை மட்டும் வைத்து கடன் பெறலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புதல் 5 நிமிடங்களுக்குள் கிடைக்கும். பான் கார்டு விவரம் சமர்ப்பிக்க வேண்டும் . அனைத்து தகவலும் வங்கியில் சரிபார்க்கப்படும். உங்கள் கடன் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.