தீராத மார்பு சளியை அடியோட நீக்க வெற்றிலை ஒன்றே போதும்.. 100% நிரந்தர தீர்வு!!

0
152
Just one betel nut is enough to get rid of persistent chest mucus.. 100% permanent solution!!
Just one betel nut is enough to get rid of persistent chest mucus.. 100% permanent solution!!

தீராத மார்பு சளியை அடியோட நீக்க வெற்றிலை ஒன்றே போதும்.. 100% நிரந்தர தீர்வு!!

இன்று சுவாசம் தொடர்பான பாதிப்புகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.காற்று மாசு,மாறி வரும் பருவநிலை,வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் ஆஸ்துமா,நெஞ்சு சளி,இருமல்,காய்ச்சல்,நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை நிகழ்கிறது.

மழைக்காலங்களில் சளி உண்டாவது சாதாரணமான ஒன்று என்றாலும் அதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ளுங்கள்.அதேபோல் அலர்ஜி பாதிப்பு இருப்பவர்கள் அதை அலட்சியப்படுத்தாமல் தீர்வு காண முயலுங்கள்.

தீர்வு 01:-

1.வெற்றிலை – ஒன்று
2.ஜிஞ்சர் – ஒரு துண்டு
3.தேன் – ஒரு தேக்கரண்டி

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு வெற்றிலையை நறுக்கி சேர்க்கவும்.

அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி விட்டு இடித்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.பானத்தை 3 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் சளி,காய்ச்சல்,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தீர்வு 02:-

1.வெற்றிலை – ஒன்று
2.சோம்பு – ஒரு தேக்கரண்டி
3.உலர் திராட்சை – எட்டு முதல் பத்து வரை
4.மிளகு – நான்கு

ஒரு வெற்றிலையை நீரில் விட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சோம்பு,எட்டு உலர் திராட்சை மற்றும் நான்கு மிளகு சேர்த்து மடித்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி,ஆஸ்துமா,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.

வெற்றிலை செரிமானத்தை ஊக்குவிக்கும் ஒரு மூலிகை.இவை நீரிழிவு நோய்,மன அழுத்தம்,பல் தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.வெற்றிலையில் பொட்டாசியம்,அயோடின்,வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.