இந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்!

Photo of author

By Kowsalya

இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை தொப்பை தான். டயட் முதல் உடற்பயிற்சி வரை செய்து விட்டு பலனிக்கவில்லை என்று புலம்புவார்கள் பலர் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

இன்று ஒரே ஒரு பழம் தான் அந்த தொப்பையை மாயமாய் மறைய வைக்கும்.

அந்த பழம் என்ன என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் அன்னாசி பழம்.

தேவையான பொருட்கள்:

1. அன்னாசி பழம் இரண்டு துண்டு.

2. ஓமம் 2 ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் அன்னாசி பழத்தை எடுத்து தோலை சீவி வட்ட வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும். ஒரு சிலர் நடுவில் உள்ள தண்டை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அது தான் உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது.

2. அதை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அன்னாசி துண்டுகளை போட்டு 2 ஸ்பூன் அளவு ஓமத்தை போட்டு கொள்ளவும்.

4. பின் கால் லிட்டர் வரை தண்ணீர் ஊற்றவும்.

5. நன்கு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

6. பின் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடவும்.

7. இது இரவு முழுவதும் ஊற வேண்டும்.

8. பின் காலையில் அதை பார்க்கும் பொழுது நன்கு ஊறி இருக்கும். இதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும். நன்கு அன்னாசி பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

9. இதனை வெறும் வயிற்றில் 15 நாட்கள் குடித்து வர உங்களது தொப்பை இருந்த இடம் தெரியாத அளவிற்கு மாயமாய் மறைந்துவிடும்.