ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!
நம் அனைவருக்கும் குலதெய்வம் இருக்கிறது. குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ஒருவேளை குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால் தீராத கஷ்டங்கள் தங்களை வந்து சேரும். எனவே எந்த ஒரு சூழிநிலையிலும் குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்து விடாதீர்கள்.
வீட்டு பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன்னர் ஒரு தீபம் ஏற்றி வைப்பதினால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும்.
இந்த தீபத்தை இலுப்பை எண்ணெயில் போட வேண்டும். குலதெய்வ படத்திற்கு முன் ஒரு மண் அகலில் இலுப்பை எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும். பின்னர் மனமுருகி வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்.
அதுமட்டும் இன்றி இந்த தீபத்தால் வீட்டில் நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள்.