இனி டோல்கேட்களில் ரூ.3000 செலுத்தினால் போதும்.. வருடம் முழுவதும் பயணம்!!

0
9
Just pay Rs.3000 at the tollgates.. Travel for the whole year!!
Just pay Rs.3000 at the tollgates.. Travel for the whole year!!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க கூடிய கார்களுக்கு சுங்கச்சாவடிகளில் பயணிப்பதற்கான இரண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின்படி, கூடிய விரைவில் 3000 ரூபாய் மட்டும் செலுத்தி ஒரு வருடத்திற்கான சுங்கச்சாவடி பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் இதுவே 15 வருடங்கள் இலவசமாக பயணிக்க நினைப்பவர்கள் 30,000 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தத் திட்டமானது fastag திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக பயணம் செய்யும் பயனர்கள் நீண்ட நேரம் காத்திருத்தல் மற்றும் அவர்களுடைய மன அமைதியானது கெடும் வகையில் எந்த விதமான செயல்களும் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மட்டுமின்றி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் சிரமத்தை குறைப்பதாக அமையும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு 340 ரூபாய் மாத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவ்வாறினில் வருட கட்டணம் 4080 ரூபாய் ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறையின் இந்த புதிய திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே போதும் என்றும் இதன் மூலம் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் காரில் செல்லக்கூடியவர்கள் செலுத்தக்கூடிய கட்டணமானது தேவை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇனி 3 நாட்களில் புதிய மின் இணைப்பு!! மின்சாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!!
Next articleஇனி இதையும் விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது!! புதிய பொருட்களை இணைத்த IATA!!