இதனை வாயில் வைத்தாலே போதும் நெஞ்சு சளி அறுத்தெடுக்கும்!! இனி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை!!

Photo of author

By Rupa

இதனை வாயில் வைத்தாலே போதும் நெஞ்சு சளி அறுத்தெடுக்கும்!! இனி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை!!

வெயில் காலத்தை எல்லாம் தாண்டி இவ்வாறான மழைக்காலத்தில் மிகவும் எளிதாக அனைவரும் சளி மற்றும் இருமல் காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதுண்டு. அவ்வாறு இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆயிரக்கணக்கில் செலவு செய்வது உண்டு. ஆனால் நமது வீட்டில் இந்த பதிவில் வரும் ஒரு பொருள் இருந்தால் போதும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை.

தேவையான பொருட்கள்;

சித்தரத்தை ஒரு துண்டு

தண்ணீர்

 

செய்முறை:

சித்தரத்தை என்பது கபத்தை அகற்றி உடல் வெப்பத்தையும் குறைக்க உதவும். பசியை தூண்டுவதோடு செரிமானத்தை நன்றாக ஏற்படுத்தும்.

வாய்ப்புண்:

இரவு தூங்குவதற்கு முன் சித்தரத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மற்றும் வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்து முழுங்க வேண்டும்.

இவ்வாறு செய்து வர வாய்ப்புண் வாய் துர்நாற்றம் உடனடியாக நீங்கும்.

குடல்புண்:

அதேபோல இந்த ஊற வைத்த தண்ணீரை சாதம் வடிக்கும் கஞ்சியுடன் கலந்து குடித்து வந்தால் குடலில் இருக்கும் புண் குணமாகும்.

சளி,இருமல்,காய்ச்சல்:

சித்தரத்தையை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் போட வேண்டும். பின்பு அது அரை கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். அந்த அரை கிளாஸ் வெறுப்பான நீரை குடித்து வர நமக்கு ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் அனைத்தும் குணமாகும்.