1 வாரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உணவில் இதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

உடல் சீராக இயங்க இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.இந்த இரத்த அணுக்கள் அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்:

1)நன்னாரி வேர்

இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது.இந்த நன்னாரி வேர் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

2)பசலை கீரை

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த,இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பசலை கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

3)தர்பூசணி

நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றான தர்பூசணியை சாப்பிடுவதால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

4)நட்ஸ்

உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

5)கருப்பு எள்

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகமாக கருப்பு எள்ளை பொடித்து வெல்லம் கலந்து சாப்பிடலாம்.

6)எலுமிச்சை சாறு,தேன்,ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு டம்ளரில் பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

7)ஆப்பிள்

தினமும் ஒரு முழு ஆப்பிள் அல்லது அதன் சாறை பருகி வந்தால் இரத்த அணுக்களின்’எண்ணிக்கை அதிகரிப்பதோடு இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

8)இனிப்பு உருளைக்கிழங்கு

இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுப் பொருளாகும்.இதை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதேபோல் கீரை,பீட்ரூட் உள்ளிட்டவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும்.