வீட்டில் உள்ள இந்த பொருட்கள் மட்டுமே போதும்! இனி ஆயுசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி இருக்காது!

Photo of author

By Amutha

வீட்டில் உள்ள இந்த பொருட்கள் மட்டுமே போதும்! இனி உங்கள் ஆயுசுக்கும் மூட்டு வலி முழங்கால் வலி இருக்காது! 

வீட்டில் இருக்கக்கூடிய வயதானவர்கள் மூட்டு வலியால் மிகவும் அவதிப்படுவர். அவர்களுக்கு மூட்டுகளில் உள்ள பசை தன்மை குறைவாக இருக்கும். எனவே மூட்டுகளில் அதிகப்படியான வலி உண்டாகிறது.

இதனால் அவர்களால் சரியாக உட்கார முடியாது. எந்திரிக்க முடியாது. படி ஏற முடியாது. வலியால் துடித்துப் போவர். இந்தப் பதிவில் நாம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அந்த மூட்டு வலியை சரி செய்யக்கூடிய முறையை பார்ப்போம்.

** இதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து நல்லெண்ணையை சூடு படுத்தவும். அதிகம் காய்ந்து விடக்கூடாது. மிதமான தீயிலேயே சூடு செய்யவும்.

** அடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்க்கவும். தூள் உப்பு சேர்க்க கூடாது. உப்பு சேர்த்ததும் லேசாக பொரிய ஆரம்பிக்கும்.

** அடுத்து இதில் அரை மூடி அளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது சேர்த்ததும் லேசாக தெளிக்க ஆரம்பிக்கும். ஓரளவு சலசலப்பு அடங்கியதும் இறக்கி வைத்து ஆறியதும் ஒரு பாட்டிலில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

இதை கால் மூட்டு, கை மூட்டுகளில் மற்றும் பாதங்களில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் தடவலாம். இதை காலையில் குளிக்கப் போவதற்கு முன்பும், இரவு தூங்கப் போவதற்கு முன்பும் தடவி வருவது நல்ல பலனை தரும்.

ஒவ்வொரு முறை தேய்க்கும் பொழுதும் ஒரு கரண்டியில் எடுத்து லேசாக சூடு படுத்தி தேய்ப்பது நல்ல ஒரு ரிசல்ட்டை கொடுக்கும். வெதுவெதுப்பான சூட்டில் தடவும் பொழுது இது நன்றாக ரத்தத்தில் ஊடுருவி ரத்த ஓட்டம் அதிகரித்து வலியை குறைக்கிறது. இது ஒரு நாளில் தடவினால் மட்டும் போதாது. குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம் வரை தடவ வேண்டும்.