உடல் சூடு ஆரம்பித்த சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!! 

Photo of author

By CineDesk

உடல் சூடு ஆரம்பித்த சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!!

கதலி பழம் இந்த ஒரு பழம் மட்டும் போதும் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளை போக்க கூடியது. இந்த கோடைக்காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சினை உடல் சூடு. அதாவது அடி வயிற்றில் சூடு, இரப்பையில் இருந்து, சிறு குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருக்க கூடிய சூடுகளை எல்லாம் தணிக்கிறது.

அடுத்து மூத்திரப் பையில் ஏற்படக் கூடிய தோஷங்கள், நீரச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர் பிரியாமை, கை, கால் வீக்கம் இது சார்ந்த விஷயங்கள், யூரின் வரும் போது சிரமப்படுதல், இது போன்ற விஷயங்களை குணப்படுத்தி முத்திரப் பையை பலப்படுத்தி, நல்ல பலனை கொடுக்கும்.

மேலும் உடல் குளிர்ச்சி, கண் குளிர்ச்சி, உடல் முழுக்க ஏற்படும் சூடு, கை கால் மற்றும் பாத எரிச்சல், கை கால் வீக்கம் போன்ற பலவிதமான நோய்களை குணமாக்க கூடிய வல்லமை பெற்றது. ஹீமோகுலோபின்  குறைவாக இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடும் போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கு கர்ப்ப பையில் ஏற்பட கூடிய பிரச்சிகளை போக்குகிறது. கதலி பழத்தை தொடர்ந்து சாப்பிடும் போது உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்குகிறது.