இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!!
கோடையில் வேர்க்குரு மறைய இதை செய்தால் போதும்.கோடை காலத்தில் வேர்க்குரு வருவதற்கான காரணங்கள்:
1: இந்த வேர்க்குரு அதிகமாக எதனால் வரும் என்றால், கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பொழுது வியர்வை அதிகமாக சுரக்கும் அப்போது அந்த வாய் அடைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு சிலருக்கு வேர்வை வர முடியாமல் அது வேர்க்கூறாக மாறிவிடும்.
2: உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதினால் அல்லது உடலில் பித்தம் அதிகமாக இருப்பதினால் இந்த வேர்க்குரு வரும்.
வேர்க்குரு இயற்கையான முறையில் சரி செய்வது விடலாம்.
தேவையான பொருட்கள்
வேப்ப இலை பவுடர்
கஸ்தூரி மஞ்சள்
கற்றாழை ஜெல்
சந்தன பவுடர்
ரோஸ் வாட்டர்
செய்முறை
1: ஒரு டீஸ்பூன் வேப்ப இலை பவுடரை எடுத்து கொள்ளவும். இந்த வேப்பிலை பவுடர் பயன்படுத்துவதனால் நம்ம உடம்பில் இருக்கக்கூடிய சூட்டை தணிக்கும் மற்றும் நம் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
2: பின்பு அதில் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளை போட வேண்டும். இந்த கஸ்துரி மஞ்சள் பயன்படுத்துவதனால் நம் உடம்பில் இருக்கக்கூடிய அசுத்தங்கள் அனைத்தும் நீங்கிவிடும் மற்றும் வேர்க்குரு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும்.
3: பின்பு அதில் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். இந்த கற்றாழை ஜெல் பயன்படுத்துவதனால் நம் உடம்பில் உள்ள சிவத்தல், அரிப்பு அது போன்ற பிரச்சினைகள் எல்லாம் குறைந்து விடும்.
4: பின்பு அதனுடன் சந்தனம் பவுடர் சேர்க்க வேண்டும். இந்த சந்தனம் பவுடர் பயன்படுத்துவதனால் நம் உடம்பில் உள்ள சூடு குறைந்து விடும்.
5: அனைத்தையும் சேர்த்தவுடன் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
இதில் சேர்த்துக் கொண்ட அனைத்து பொருள்களும் இயற்கையான பொருள்கள் ஆகும் அதனால் நம் உடம்பிற்கு எந்த ஒரு நோயும் வராது.
இந்த பேஸ்ட்டை ஒரு மணி நேரம் நம் உடம்பில் உள்ள வேர்க்குரு பகுதிகளில் தினமும் தடவி வந்தால் வேர்க்குரு பிரச்சனைகள் உடனடியாக நீங்கிவிடும்.
எனவே இது போன்று இயற்கையான முறைகளை நாம் பயன்படுத்தி வந்தால் வேர்க்குரு சரியாகிவிடும்.