முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க இந்த 3 பொருட்களை பயன்படுத்துங்கள் போதும்!! ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!
தன்னை அழகு படுத்தி கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்புகின்றனர்.இதற்காக முகத்தை வெள்ளையாகும்,அழகாவும் மாற்ற இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.காரணம் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதினால் தான்.இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
ஆபத்தை ஏற்படுத்தும் செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும்.இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்
*பச்சைபயறு – 1/2 கிலோ
*ரோஜா இதழ் – 50 கிராம்
*கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
செய்முறை:-
முதலில் 1/2 கிலோ பச்சை பயறு எடுத்து சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து கொள்ளவும்.
அதேபோல் வீட்டில் வளரக் கூடிய பன்னீர் ராஜாக்களின் இதழில் 50 கிராம் அளவு எடுத்து அதிக வெயில் படாத இடத்தில் காயவைத்து கொள்ளவும்.பன்னீர் ரோஜா இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பன்னீர் ரோஜா ர்இதழ்களை வாங்கி பயன்படுத்தலாம்.
அதன் பின் கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் அளவு எடுத்து அதையும் வெயிலில் காய வைக்கவும்.இந்த மூன்று பொருட்களும் நன்கு உலர்ந்து வரும் வரை காயவைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் காயவைத்துள்ள 1/2 கிலோ பச்சை பயறு,50 கிராம் ரோஜா இதழ்,50 கிராம் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு ஜல்லடை கொண்டு நன்கு சலித்து கொள்ளவும்.இதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
இந்த பவுடரை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள மாவில் 2 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழப்பிக் கொள்ளவும்.
பின்னர் இதை முகத்தில் தடவி நன்கு மஜாஜ் செய்யவும்.20 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் முகம் பொலிவாகவும்,அழகாவும் இருக்கும்.
முகத்தை நன்கு சுத்தமாக கழுவிய பின்னர் அந்த ஈரப்பதத்துடன் இந்த மாவை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெரும்.இந்த மாவு இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதால் இதை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.