மூன்று பொருட்களை பயன்படுத்தினால் போதும்! பற்களில் உள்ள கரைகள் முற்றிலும் அகலும்!
ஒருவருக்கு அவரவர்களின் பற்கள் அழகாக இருந்தாலே அவர்களின் முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடன் நேர்மறை எண்ணங்கள் இருப்பவர்களாக திகழ்வார்கள். ஆனால் உணவு முறை அல்லது ஏதேனும் பழக்க வழக்கங்களால் பற்களில் காரை ஏற்பட்டு அவை நம் முகத்தின் அழகையே கெடுத்து விடும். பற்களில் உள்ள கரைகள் எவ்வாறு நீக்குவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
தேவையான பொருட்கள்:இஞ்சி ,எலுமிச்சை சாறு, உப்பு,
செய்முறை: முதலில் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சீவி நன்கு வடிகட்டி அதனுடைய சாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதன் பிறகு நமக்கு தேவைப்படும் அளவிற்கு அரை டீஸ்பூன் அல்லது ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலக்கி நாம் பல் துலக்கும் பொழுது இதனை பயன்படுத்தினால் பற்களில் ஏற்பட்டுள்ள கரைகள் நீங்கும். பற்கள் வெண்மையாக பளிச்சிடும். நீங்கள் தினந்தோறும் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வாய்ப்புண் போன்றவைகளும் நீங்கும்.