கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!! 

0
467
K N Nehru: If you want to succeed, do succession politics! Udayanidhi's next son Inbanidi's position in the party!!
K N Nehru: If you want to succeed, do succession politics! Udayanidhi's next son Inbanidi's position in the party!!

கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!!

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவானது சேலம் மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து அதில் அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு சரமாரியாக பேசியுள்ளார்.

அதில், சேலம் மாவட்டம் எம் ஜி ஆர் ஜெயலலிதா அவர்களுக்கு அடுத்தபடியாக எடப்பாடி அவர்களின் கோட்டையாக தற்பொழுது சேலம் மாவட்டம் இருக்கும் பட்சத்தில் நாளடைவில் இது ஸ்டாலின் தளபதி கோட்டையாக மாறும்.

தற்பொழுது சேலத்தில் திமுக எம் எல் ஏ ஒருவராக இருக்கும் பட்சத்தில் நாளடைவில் 11 பேரக வரக்கூடும். எதிர்க்கட்சியினர்  நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று நினைப்பது இனி ஒருபோதும் நடக்காது.

அதேபோல வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டி வரும் எடப்பாடிக்கு வாரிசு இல்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு வாரிசு இருந்தால் நீங்களும் வாரிசு அரசியல் செய்யுங்கள்.

தற்பொழுது வரை எங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வழி நடத்தும் எங்கள் தலைவர் குடும்பத்திற்கு எப்பொழுதும் விசுவாசமாகவே இருப்போம். அதுமட்டுமின்றி அவர்களோடு இணைந்து நேர்மையான வழியில் கட்சியை வழி கொண்டு போக வழி வகுப்போம்.

அந்த வகையில் அடுத்த தளபதி உதயநிதி என்றாலும் சரி, இல்லை அவரது மகன் இன்பநிதி என்றாலும் சரி நாங்கள் வாழ்க என்று சப்தமிட்டு கூறுவோம். தற்பொழுது வரை எதிர்க்கட்சி பேசட்டும் என்று நாங்கள் வேடிக்கை பார்த்தது தப்பாகிவிட்டது. எங்கள் தளபதியின் இனி ஒவ்வொரு நடவடிக்கையும் உங்களுக்கு பெரிய இடியாக தான் இருக்கும் இவ்வாறு அவர் பொது நிகழ்ச்சியில் பேசியது வாரிசு அரசியல் தான் என்பதை உறுதி செய்ய வைத்துள்ளது.

Previous articleசொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்!
Next articleபத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்!