கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

0
41
Kaathi actor's new movie teaser released this evening!! Excited fans!!
Kaathi actor's new movie teaser released this evening!! Excited fans!!

கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

அர்ஜுன் தாஸ் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகராக உள்ளார். இவர் முதலில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானர். அதன் பின்னர் மாஸ்டர் பிரம்மாண்ட வெற்றி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்கா  இடம்  பிடித்தார். அதனையடுத்து அவர் 3  முறையாக லோகேஷ் கனகராஜ்வுடன் இணைந்து விக்ரம்  படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது அவர் அநீதி என்ற படத்தில் நடத்தி வருகிறார். இந்த படத்தை வசந்த பாலா  இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் அர்பன் பாய்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாகும். அதனையடுத்து இந்த படம் இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளும் வெளியாக உள்ளது. தமிழில் இந்த படத்தில் பெயர் அநீதி என்றும் தெலுங்குவில் பிளட் அண்டு சாக்லேட் என்ற பெயரிலும் வெளியாக உள்ளது.

இந்த படம் இரண்டு மொழிகளிலும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த படத்தில் வனிதா விஜயாகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அநீதி திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

author avatar
Jeevitha