நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!

0
28

நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!! 

சினிமா நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த காரியத்தால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்.

ஆந்திரமாநிலத்தில் உள்ள  விசாகப்பட்டினத்தில் ஹோம்கார்டு ரிசர்வ் இன்ஸ்பெக்டராக  சுவர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.மேலும், ஆந்திர போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார். இவர் சினிமா மோகம் கொண்டவர்.  சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

அதேபோல் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சீனி மற்றும் ஸ்ரீதர். இவர்கள் இருவரும் இந்திய கடற்பரையில் பணியாற்றி தங்களது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் தங்களிடமிருந்த ஒரு கோடி மதிப்பிலான ரூ.2000 ரூபாய் நோட்டுகளை 10% கமிஷன் அடிப்படையில் மாற்றுவதற்காக இடைத்தரகராக இருந்த சூரிய பாபுவிடம் கொடுத்துள்ளனர்.

பணத்தை சூரியபாபு  மாற்றிய பிறகு 90 லட்சம் ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்துக்கொண்டு விசாகப்பட்டினம் கடற்கரை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஸ்வர்ணலதா, ஊர்காவல் படையினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த சமயம் அவ்வழியே வந்த சூரிய பாபுவின் காரை தடுத்து நிறுத்திய ஸ்வர்ணலதா அவரது காரை சோதனை செய்து அதில் இருந்த பையை சோதனை இட்டார். அப்போது அந்தப் பையில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்ட ஸ்வர்ணலதா இந்த பணம் யாருடையது? எதற்காக கொண்டு செல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கடுத்து இந்த பணத்தை கொண்டு செல்ல ஆவணம் ஏதேனும் உள்ளதா? எனவும் கேட்டுள்ளார். ஆனால் சூரிய பாபுவிடம் எந்த காரணமும் இல்லை. ஆவணமும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஸ்வர்ணலதா தனக்கு 20 லட்சம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்துச் செல்லுமாறு சூரிய பாபுவிடம் மிரட்டி உள்ளார். இல்லையெனில் ஆவணம் இன்றி பணம் கொண்டு செல்வதாக மொத்த பணத்தையும் பறிமுதல் செய்து விடுவதாக எச்சரித்துள்ளார்.

இதையடுத்து ஸ்வர்ணலதா உடன் பேரம் பேசிய சூரிய பாபு கடைசியாக 12 லட்சம் ரூபாயை அவருக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை எடுத்துச் சென்று சீனி மற்றும் ஸ்ரீதரிடம் ஒப்படைத்து விட்டு  ஸ்வர்ணலதா பற்றி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சீனி மற்றும் ஸ்ரீதர் இருவரும் நேராக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் விக்கிரமாவை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

ஸ்வர்ணலதா சினிமாவில் நடிக்க ஆசை கொண்டவர் இவர் தற்போது ஏபி 31 என்ற  படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார். சினிமா தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் இவ்வாறு மிரட்டி பணம் வாங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவாக செயல்பட்டு வருபவர் ஸ்வர்ணலதா.

இதனால் அவரை காப்பாற்ற கட்சியின் முக்கிய பிரமுகர்கள் முயற்சி செய்த நிலையில் அனைத்தும் தோல்வியில்  முடிந்த நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று  வருகிறது.ஸ்வர்ணலதா தனது நடிப்பை திறனை காட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.